ஜெர்மனியின் அதிநவீன பேருந்து இலங்கையிலும் !
Friday, May 5th, 2017
உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில் அறிமுகமாகவுள்ளது.
இந்த பேருந்து நடமாடும் வீடொன்றிற்கு சமமானதென்பது விசேட அம்சமாகும்.அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட நவீன பேருந்தில் படுக்கை அறை, குளிக்கும் அறை, உணவு அறை மற்றும் வீட்டு பொருட்கள் அடங்கிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இங்கு சபாரி ரக மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துவதற்கான நிறுத்துமிட வசதியும் காணப்படுகின்றது.40 அடி நீளமான இந்த பஸ் வண்டி இலங்கை பெறுமதியில் 23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
3225 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்!
ஆகஸ்ட்மாதம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் - மகிந்த தேசப்பிரிய!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!
|
|
|


