ஜல்லிக்கட்டு தடை விவகாரம்: தமிழ் நாட்டுக்கு மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!
Wednesday, January 18th, 2017
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டினை தடை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பகுதியில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது சர்ச்சைகள் பல வெடித்துள்ளதுடன் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.அதற்கு வலுசேர்க்கும் முகமாக சமூக வலையத்தளமூடாக அழைப்பு விடக்கப்பட்டு இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று மாலை4 மணிக்கு நடைபெற்றது.
குறித்த போராட்டத்திக்கு இலங்கை விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் பதிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதற்கும் அமைவாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுதிரண்டு குறித்த தடைக்க எதிராக கொசங்களை எழுப்பி தமது ஆதரவினை தமிழகத்தில் போராடும் உறவுகளுக்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
ஈழ தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பவங்களுக்கு எதிர்ப்பினை தெரிவித்து தமிழ்நாட்டில் போராட்டங்களை கடந்த ஆண்டும் கூட தமிழக மக்கள் முன்னெடுத்திருந்தனர்.அந்த வகையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Related posts:
|
|
|


