ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை விஜயம் – கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்ப்பு!

Sunday, July 23rd, 2023

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: