ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் அலி சப்ரி – மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் என நம்புவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, July 3rd, 2024

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் என நம்புவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள அண்மைக்கால முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்

மேலும் அமைச்சர் அலி சப்ரி தலைமை அமைச்சரவை செயலாளர், நீதி அமைச்சர் மற்றும் ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் இதன்போது சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பாய்வுகளை மேற்கொண்ட பின்னரே தீர்மா...
இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு - பிரதமர் ரணில் விக்கிரமசிங...
16 பேரின் கையொப்பம் பெற்றா சைபர் தாக்குதலை  மேற்கொண்டனர் – அரசில் தான் திருடர் உள்ளனர்  நாமல் !