ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த வாரம் இலங்கை விஜயம் – கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடல்!
Saturday, September 2nd, 2023
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லியில் நடைபெறவுள்ள ஜி 20 ஆவது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், ஜனாதிபதி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் படுகொலை: வாய்பேச முடியாத சிறுவன் சாட்சியம்!
போலி ஆவணங்களை பயன்படுத்தி ருமேனியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!
பிரான்ஸ் கோரிக்கை – உன்ரைனின் மேலும் நான்கு நகரங்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!
|
|
|


