ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Monday, January 15th, 2024
ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, உயர்த்தப்பட்டுள்ள மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினரினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற ரீதியில் வருடாந்த மதுவரி அனுமதிப் பத்திரத்துக்கான கட்டணத்தை கடந்த 12 ஆம் திகதி முதல் அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் பணிப்பு!
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடல்!
ஏப்ரல்முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
|
|
|


