ஜனாதிபதி தேர்தல் – பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு!
Monday, September 9th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வாகனங்களின் பதிவுகள் அதிகரிப்பு !
விரைவில் மாகாணசபைத் தேர்தல்? - மகிந்த தேசப்பிரிய!
இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் -அமைச்சர் சரத் வீரசேகர குற்றச்சா...
|
|
|


