ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் அனைத்து வன்முறைகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் - வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா ...
இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம்!
அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத...
|
|