ஜனாதிபதி – அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடையே நாளை சந்திப்பு!
Friday, May 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி, நாளை முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தர்.
இதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியிலும் ரணில் விக்ரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்று இருந்தார்.
அத்துடன், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்னாள் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது நாட்டின் நெருக்கடியை தீர்த்து ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கான அடுத்தகட்டமாக கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


