ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு – EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!
Wednesday, August 7th, 2019
வரும் ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்த சட்ட மூல முழுமையான அமூலாக்கமே எமது பிரதான இலக்காக இருக்கும் எனவும் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் நம்பிக்கையூட்டும் உறுதி மொழிகளை யார் வழங்குகிறார்களோ அந்தத் தரப்புக்கே தமது தலைமை ஆதரவு வழங்ககும் எனவும் EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று 5ம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சவுடனான, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான, கட்சிகளின் சந்திப்பில் EPDPயின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தலைமைலான குழுவனரும் இடம்பெற்றமை தொடர்பில் கருத்து கேட்ட போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன அமைக்கவுள்ள கூட்டமைப்பில் , EPDPயும் அங்கம் வகிக்குமா? எனக்கேட்ட போது அதுதொடர்பில் அவர்கள் வழங்கும் உறுதி மொழிகளை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைமை தமிழ் மக்களுக்கு சாதகமான ஓர் நல்ல முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


