ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் – இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக, இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒருசேரச் சந்தித்திருந்தார். 

இதன்போது பொது வேட்பாளருக்கு ஆதரவான தரப்பினர் இது குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.   

இது தொடர்பாகக் கூட்டத்தின் இறுதியில் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர்,  “பொது வேட்பாளர் தொடர்பாக தம்மால் எதுவும் கூற முடியாது.

அது தமிழ்க் கட்சிகளுக்குள் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய தீர்மானம்” என தெரிவித்ததாக அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை கறிப்பிடத்தக்கது

000

Related posts:


நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும் – சாதித்துக் காட்டுவார் டக்ளஸ் தேவானந்தா என்கிறார் இரா. செல்வவட...
கொரோனாவின் மூன்றாவது அலை இராஜங்கனையில் பதிவாகியுள்ளது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று...
இந்தியா, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தால் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் - அமைச்சர் அலி சப்ர...