ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டி – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு!
Tuesday, September 3rd, 2019
புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும்.
இதற்கு கட்சியின் மத்திய செயற்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் இழப்பீட்டு!
சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் - இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் ...
|
|
|


