ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பம் வெளியானது!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் பெரும் இழுபறி நிலையில் இருந்து வந்தது.
நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உட்பட முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கு குரல் கொடுக்கப்பட்டுடு வந்தது.
இந்நிலையில் சுகாதார தொழில் நுட்பக்கழுவின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு ஜனாசா நல்லடக்கத்திற்கு நெற்றையதினம் (25) அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு!
பொலிஸாரின் விடுமுறைகள் உடனடி இரத்து!
நான்கு மாதத்தில் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள்!
|
|