ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Saturday, December 23rd, 2023
ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார சபையின் செயற்பாடுகளை சுயாதீன நிறுவனம் ஒன்றின் மூலம் கணக்காய்வு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுயாதீன தணிக்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2017 ஆம் ஆண்டு இலங்கை ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் - ஜனாதிபதி!
நாட்டில் மீண்டும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை!
டைனமட் வெடித்ததில் ஒருவர் பலி” மற்றொருவர் படுகாயம் – கிண்ணியாவில் சம்பவம்!
|
|
|


