ஜனநாயக நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை – இவ்விரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்து!

ஒரு ஜனநாயக நாட்டில் பொலிஸும் சுயாதீன நீதித்துறையும் இல்லாவிட்டால் அது சட்டத்தின் ஆட்சியே கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அடிப்படை சட்டமான அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற 156வது பொலிஸ் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசு என்ற இயந்திரத்தில் பொலிஸும் நீதித்துறையும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய அவர் இவ்விரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவ...
திருக்கார்த்திகை திருநாள் !
சாணக்கியனின் ஊழல் குறித்து வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிவரும் - ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...
|
|