சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, November 17th, 2023

பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் 2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது, ஏனைய மொழி அறிவையும் மாணவத் தலைமுறைக்கு வழங்க வேண்டும். இதன்காரணமாகவே, இந்த திட்டம் கொண்டு வரப்படுகின்றது.

அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின் மாணவர்களின் எதிர்காலத்திற்காக புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழ், சிங்கள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைத்தீவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மாலைத்தீவின் குடியரசு சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில், நாடுகள் பலவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் - இந்தியப்...
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள்...
நெருக்கடியான சூழலில் நட்பு நாடுகள் உதவ வந்திருப்பது நாட்டின் அதிர்ஷ்டம் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப...