சைபர் தாக்குதல் ஏற்படலாம்-  இலங்கைக்கு எச்சரிக்கை!

Sunday, May 14th, 2017

உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இணைய தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கையில் கணனி கட்டமைப்பில் காணப்படும் முக்கிய ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட 99இற்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இணையவெளி தாக்குதல் காரணமாக அந்நாடுகளின் கணனி கட்டமைப்பு செயலிழந்துள்ளதோடு, முக்கிய தரவுகள் திருடப்பட்டுள்ளன.

இலங்கையில் அதற்கான அறிகுறிகள் தென்படாத போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கணனி தரவுகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இவ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாரிய நிறுவனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் - பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா இடையே முக்கிய சந்திப்பு ...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன்முதல் வழங்கப்படும் -...