சைபர் தாக்குதல் ஏற்படலாம்- இலங்கைக்கு எச்சரிக்கை!
Sunday, May 14th, 2017
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இணைய தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கையில் கணனி கட்டமைப்பில் காணப்படும் முக்கிய ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட 99இற்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இணையவெளி தாக்குதல் காரணமாக அந்நாடுகளின் கணனி கட்டமைப்பு செயலிழந்துள்ளதோடு, முக்கிய தரவுகள் திருடப்பட்டுள்ளன.
இலங்கையில் அதற்கான அறிகுறிகள் தென்படாத போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கணனி தரவுகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இவ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாரிய நிறுவனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள் வெற்றிடங்கள்!
யாழ் மாவட்ட செயலகத்தில் வாகன விபத்து ௲ பல வாகனங்கள் சேதம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியுடன் ...
|
|
|


