சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறைக்பு அமைச்சரவை அனுமதி!
Wednesday, September 7th, 2022
அரச ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடுமுறை சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கே வழங்கப்படவுள்ளது.
பொதுச் சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரான பிரதமரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று (06) அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
Related posts:
உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை -பிரித்தானிய பிரதமர் ரிஷி சுன...
தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சி - இராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் த...
பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!
|
|
|


