சேர்.பொன்.இராமநாதனை நினைவுகூர்ந்த பிரதமர்!
Sunday, September 11th, 2016
1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது அரசியல் தலைவர்கள் பலர் கொல்ப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்த்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துணிந்து செயற்பட்டதால் பல விளைவுகளை தவிர்க்க முடிந்தது. ஒரு தமிழ்த் தலைவர் இவ்வாறன நடவடிக்கைகளில் ஈடுபட்டதையிட்டு நாம் பெருமையடைய வேண்டும். அவ்வாறான ஒரு இல்லாதிருந்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்தாபிப்பதற்கு தலைவர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஆகவே அவருக்கு நாம் எமது நன்றிகளைச் என்றும் செலுத்தவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த காலத்தில் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பைக் கோருகின்றேன் எனவும் தெரிவித்தார்.
நேற்றையதினம் நடைபெற்ற (10) ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சேர்.பொன்னம்பலம் இராமநாதனை நினைவுகூர்ந்ததுடன் மேற்கண்டவாறும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


