செயலாளர்கள் தடைகளின்றி கடமைகளை நிறைவேற்ற முடியும் : அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த!
Thursday, November 22nd, 2018
எந்தவித தடைகளுமின்றி அமைச்சுக்களின் செயலாளர்கள் கடமைகளை நிறைவேற்ற முடியுமென அரச நிர்வாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு முறையான விதத்தில் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர் விடுத்த விசேட அறிவித்தலில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, அரசியல் யாப்பின் 42ஆவது ஷரத்திற்குரிய 4 ஆவது பிரமாணத்தின் கீழ் அமைச்சு செயலாளர்களை நியமித்துள்ளார். எனவே அவர்களது நியமனம் குறித்து பிரச்சினைகள் எதுவும் கிடையாது என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்ததைப் போல்ன்று தற்போதும் கைகோர்க்...
நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
சரியான தீர்மானங்களின் காரணமாக ஜனாதிபதியால் 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிப்பு - அமைச்சர் நளின்...
|
|
|


