சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்,தைப்பொங்கல் திருநாள்!
Sunday, January 15th, 2023
சர்வதேச சமூகம் பொருளாதார ரீதியில் சரிவடைந்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இன்று சூரியப்பொங்கல் திருநாள் மலர்ந்திருக்கிறது.
உழவர்கள் தமக்கு நன்மைகளை செய்துக்கொண்டிக்கும் சூரியனை வணங்கி வாழ்த்தும் தினமான இன்று தமிழர்களுக்கும் தைப்புதுவருட ஆரம்பநாளாக அமைகிறது.
இலங்கை உட்பட்ட சர்வதேசத்தில் வாழும் தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் தை புதுவருடத்தை வரவேற்கும் போது சமூக வாழ்வில் புத்தொளி பிறக்கவேண்டும் என்பதையே கோரி நிற்கிறார்கள்.
குறிப்பாக இலங்கையில் வடக்குகிழக்கு மற்றும் மலையகம் தென்னிலங்கை என்று பரந்து வாழும் தமிழர்கள் தமது உரிமைகள் இந்த ஆண்டிலாவது கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கத்தை ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்தன்றும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும் இந்த வருடம் தமிழர்கள் தமது வாழ்வில் உரிமைகள். நன்மைகள் கிடைப்பதற்காக மட்டுமன்றி சரிவடைந்த பொருளாதாரத்தின் விளிம்பில் நின்று தவிக்கும் இலங்கை நாட்டின் அனைத்து மக்களுக்கும் புத்தொளி பிறக்கவேண்டும் நன்மைகள் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
அந்தப் பிரார்த்தனை நிறைவேறவேண்டும் என்பதே எமது செய்திச்சேவையின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
Related posts:
|
|
|


