சுவரொட்டிகளை அகற்ற 758 இலட்சம் ரூபா நிதி பொலிஸாருக்கு ஒதுக்கீடு – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த 3ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. இதன்போதே, சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள், அறிவித்தல் பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காக பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 1,500 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையங்களில் நிறுத்தப்படவுள்ளனர். இந்த கலந்துரையாடலில் பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை இணையம் ஊடாக அனுப்பும் மென்பொருள் செயலிழப்பு!
வாரத்தில் 45 மணி நேரம் பணிபுரியும் ஊழியருக்கு 1 1/2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண...
இந்தியன் ப்ரீமியர் லீக் - சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்று Play Off சுற்றில் விளையாடும் தகுதியை ...
|
|