சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி!
Tuesday, January 22nd, 2019
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். மாலைதீவு ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட அதிதிகளாகப் பங்கேற்பார்கள் என அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.
பெப்ரவரி 3ஆம் திகதி இரவு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரித் பாராயணம் இடம்பெறவுள்ளதுடன், பிரதான வைபவத்துடன் இணைந்ததாக மாவட்ட மட்டத்திலும் சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன என்றும் செயலாளர் கமல் பத்மசிறி கூறினார்.
Related posts:
மண்டைத்தீவில் கிரிக்கட் மைதானம் நிர்மாணிக்கப்படும் - இலங்கை கிரிக்கட்டின் தலைவர்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 389 பேருக்கு காணிகள் இல்லை - மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் தெரி...
மைத்தி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீ...
|
|
|


