சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்த மேலும் கோடிகளை திறைசேரியிடம் கேட்கும் தேர்தல் ஆணைக்குழு!
Friday, July 24th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடத்துவதாயின் மேலதிகமாக 50 கோடி ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்களிக்கும் மத்திய நிலையங்களின் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள கைக்கழுவும் கிருமி நாசினி திரவம், முகக்கவசம் மற்றும் கைகளில் மை தடவுவதற்கு பயன்படுத்தப்படும் மெழுகு குச்சி என்பன குறித்த மாவட்டங்களுக்கு நேற்றையதினம் (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வாக்ககெண்ணும் மத்திய நிலையங்களின் பயன்பாட்டிற்காக உடல் வெப்பநிலையை அளக்கும் 60 வெப்பமானிகளை கொள்வனவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு தேர்தல்கள் செலவிற்காக 100 கோடி ரூபா மத்திய திறைசேரியினால் தற்போது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை அச்சிடும் செலவுகளுக்காக 10 கோடி ரூபாவை அரச அச்சகத்திற்கு வழங்கியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் செலவுகளுக்காக மேலும் 100 கோடி நிதியை மத்திய திறைசேரியிடம் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


