சுகாதார அமைச்சுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

மற்றுமொரு பணிப்பாளரை சுகாதார அமைச்சுக்கு நியமிப்பதற்கான முடிவு அரசின் கொள்கைகளுக்கமையவே எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் 4 அமைச்சுகளுக்கு புதிய பணிப்பாளர்களை நியமிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கமைய சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பெருந்தெருக்கள் போன்ற அமைச்சுகளுக்கே பணிப்பாளர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சுக்கு புதிய பணிப்பாளர் நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம் - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்!
சமுர்த்தி கொடுப்பனவிற்காக 44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் !
|
|