சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி நியமனம்!

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நாட்டில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்றுமுழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த நிலையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மருத்துவ நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இராணுவத்தின் சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர் நாயமாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, இறுதிப் போரில் பெரும் பங்காற்றியவர்களிக் ஒருவர் என்பதுடன் கதிரியக்க நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானம்!
கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !
மோசமான காலநிலை - பணிக்கு சமுகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாள்களை விசேட விடுமுறை தினங்களாக பத...
|
|