சீரற்ற காலநிலை : மரணம் 24 ஆக உயர்வு – பாதிப்பு 1,70,000 ஐத் தாண்டியது!
Tuesday, May 29th, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
20 மாவட்டங்களிலேயே மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 45 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 310 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17 ஆயிரத்து 976 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 376 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளத்தினால் 121 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
1000 தபால் அதிபர்களை இணைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்!
சீரற்ற காலநிலை - 14 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் - இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!
|
|
|


