சீரற்ற காலநிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்
Tuesday, May 17th, 2016
தற்போது பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடிக்கும் எனவும், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் கொழும்பில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Related posts:
நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் முன்னெடுப்பு - வடக்கிலும் விவசாயம் சார்ந்த செய...
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் குறித்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் - அமெர...
இந்தோனேசியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
|
|
|


