சீன மருந்துவ கப்பல்கொழும்பு வந்தது

Tuesday, August 8th, 2017

சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ மருந்துவ கப்பல்இலங்கைக்கு நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். ‘சமாதான பேழை’ என்று அழைக்கப்படும் இக்கப்பல், உலகலாவிய ரீதியில் ஏற்படும் அசாதாரண நிலைகளின் போது விரைவான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.

இக்கப்பல் 178 மீற்றர் நீளதத்தினையும் 24 மீற்றர் அகலத்தினையும் கொண்டதாகும். உலகின் பல நாடுகளைச் சுற்றி வலம் வந்துள்ள இக் கப்பலில் நவீன அறுவைச்சிகிச்சை கூடம் , தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு மருத்துவ சேவைகள், குடியிருப்பு சிகிச்சை அலகுகள், சீடீ ஸ்கான் இயந்திரங்கள். கணனி மயப்படுத்தப்பட்ட நவீன சிகிச்சைக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது.

இலங்கையில் தரித்திக்கும் வேளையில் கப்பலின் சிப்பாய்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளனர். இக்கப்பல்,எதிர் வரும் புதன்கிழமை(9)  நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: