சீனாவின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 19th, 2024

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்த சீருடைகள் 100 வீதம் இலவசமாக வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக அரசாங்கத்திற்கு 7000 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர், சீனத் தூதுவர் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கான 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் பொதி செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கைக்கு நவம்பர் 13ஆம் திகதி முதல் கப்பலும், 21 ஆம் திகதி இரண்டாவது கப்பலும், டிசம்பர் 20ஆம் திகதி மூன்றாவது கப்பலும் சீருடையுடன் இலங்கை வரும் என்பதை சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கும் எனவும், அதற்கு முன்னர் சீருடைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவியை வழங்கிய சீன அரசாங்கத்திற்கும், சீன தூதுவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: