சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன் – நாளைமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு!
Saturday, November 13th, 2021
இலங்கையை கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து பஹ்ரைன் நீக்கியுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் நாளை 14 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியது.
இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பஹ்ரைனில் தொழில் அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 24 ஆம் திகதிமுதல் இந்த அனுமதி மறுப்பு அமுலில் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பாலித பெர்னாண்டோ நியமனம்
தற்போதைய பாடத்திட்டங்கள் நாட்டின் தேவைகருதியதாக இருக்கவில்லை – விரைவில் புதுப்பிக்கப்படும் என கல்வி...
யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு!
|
|
|


