சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, July 27th, 2021
சிறுவர்களை வேலைகளுக்கு அமர்த்த முடியுமான ஆகக்குறைந்த வயதெல்லையை 18 வயதாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரித்துவருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த சிறுமி எரிகாயங்களுடன் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வயது குறைந்த சிறுவர்களை வேலைகளுக்காக அமர்த்துவது தொடர்பாக சமூகத்தில் விவாதங்கள் இடம்பெறுகின்றன
இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க, ஆகக் குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்த்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவியுங்கள் – ஜனாதிபதி!
அரிசி இறக்குமதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் - விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடு...
அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொ...
|
|
|
டெல்டா பரவுவதற்கு 15 நிமிடங்கள் போதும் - வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர் என ரிட்ஜ்வே க...
சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - இந்திய மீனவர்கள் 19 பேர...


