சிறுவர்களுக்கு தடுப்பூசி 100 விகித செயற்திறனை வழங்கும் – பைசர் நிறுவனம் அறிவிப்பு!

Thursday, April 1st, 2021

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மேற்கொண்ட தடுப்பூசி சோதனை 100 விகித செயற்திறனையும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியையும் காட்டுவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு ஆயிரத்து 260 சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் ஆரம்ப முடிவுகள், பக்கவிளைவுகள் இன்றி தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை காட்டுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக பைசர் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்ற தரவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உடல்நிலை பிரச்சினை அல்லது இறப்பதற்கான ஆபத்து கொண்ட சிறுவர்கள் மிக குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் திட்டம் பிரித்தானியாவில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் இருப்பவர்களே கொரோனா தொற்றினால் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

பதின்ம வயதினருக்கான சோதனைகளுடன், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசி, தற்போது 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு பரிசோதிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது - அமைச்சர் காஞ்சன வ...
செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சி - துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் க...
உலக தொழிலாளர் தினம் நாளை - யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்படும் மே தினக் கொண்டாட்...