சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன இன்று தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது அனைத்து மாணவர்களும் தமது சுற்றுச்சூழல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும் அதிகார சபை தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நகர அபிவிருத்திக்காக 1500 கோடி!
பலாலி விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவு!
கொரோனா தொடர்பில் அரச தகவல்களை தமிழில் வெளியிட வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை!
|
|