சீன முதலீடு தடைப்படின் வரி அறவீட்டை அதிகரிக்க நேரிடும் – அமைச்சர் கிரியெல்ல!

Thursday, January 12th, 2017

ஹம்பாந்தோட்டையில் சீன நிறுவனம் முதலீடு செய்யவில்லை என்றால், தேவையான பணத்தை திரட்ட வரி அறவிடும் வீதத்தை அதிகரிக்க நேரிடும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீன நிறுவனம் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்திற்காக 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கிறது.

இது கைவிட்டு போனால், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை நாட்டு மக்களிடம் இருந்து சம்பாதிக்க நேரிடும்.

கடும் கடன் சுமையில் மூழ்கியிருக்கும் இலங்கையை அதில் இருந்து மீட்க வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம், அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். எனினும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே கூட்டு எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

luxman-kiriyella

Related posts: