சித்தியடைந்த வறுமையான மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி அதிகரிப்பு!
Wednesday, October 10th, 2018
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் நிதியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவைக்கு தாக்கல் செய்துள்ளதுடன், அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இதுவரை காலமும் மாதாந்தம் 500 ரூபாவாக இருந்த இந்த தொகை 750 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.
இதுதவிர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த விஷேட தேவையுடைய 250 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
52 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பம் - பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சர...
|
|
|


