சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறும் – இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறக்கூடும் என சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் மேலும் தெரிவித்த அவர் – “கடற்கரையில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு சிங்கப்பூருடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்ற சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது, அதில் இலங்கையும் பங்கு வகிக்க வேண்டும் என்று விரும்புகிறது.
சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்குவதில் பங்களிப்பதற்காக சிங்கப்பூருடன் நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
10,000 மெகாவாட்களை உற்பத்தி செய்யும் கடல்சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஆரம்பிக்கும் சாத்தியம் இலங்கைக்கு உள்ளது.
அந்தவகையில் எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைய வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|