சா/தர விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடுப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடக்கப்படுகின்றது..
கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்காக இந்தப் பரீட்சை நடத்தப்படுகிறது.
இந்த விசேட செய்முறைப் பரீட்சை நாடளாவிய ரீதியில் பல பரீட்சை நிலையங்களில் நடத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோத மீன்பிடிவிவகாரம்: முற்றுகை போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்!
விவசாயிகள் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும் - இல்லையேல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரிசியை இறக...
மனித பாவனைக்கு தகுதியற்ற பால்மா - உத்தரவை மீறி கால்நடைத் தீவனத்துக்கு - விசாரணையை ஆரம்பதித்து விவசாய...
|
|