சாவகச்சேரியில் பட்ட மரம் முறிந்து விழுந்ததில் வீதியால் பயணித்த இளைஞன் பலி!

சாவகச்சேரி சங்கத்தானைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(01) காலை வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது தேக்குமரம் சரிந்து விழுந்ததில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடுமையான காற்று வீசியதுடன் மழையும் பெய்து கொண்டிருந்த இன்று காலை சாவகச்சேரி சங்கத்தானைப் பிரதேசத்தின் ஊடாக பூநகரிப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே பட்டுப் போயிருந்த தேக்கு மரம் வீதியில் முறிந்து விழுந்ததில் சச்சிதானந்தம் கஜந்தன் (சகி) என்ற மேற்படி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கைக்கு வருகை : மலையகத்தின் வீதிகள் புனரமைப்பு!
சமூகத்தில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார ச...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்தது!
|
|