சாவகச்சேரியில் திருடர்கள் கைவரிசை : பலர் படுகாயம்!
Wednesday, July 25th, 2018
சாவகச்சேரியில் நேற்றிரவு மூன்று வீடுகளுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கி காயப்படுத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.
சாவகச்சேரி சங்கத்தானை, சாவகச்சேரி வடக்கு, மீசாலை மேற்கு கேணியடி ஒழுங்கை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.
காயங்களுக்கு உள்ளான மூவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளரின் முறைகேடு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!
பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் த...
பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் த...
|
|
|


