சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சடிக்கும் பணி விரைவில் ஆரம்பம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

அடுத்த வாரம்முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த விரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 06 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வெளிநாடு செல்வோருக்கு மாத்திரம் அட்டைகளில் அச்சிடப்படும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
தொற்றாநோயால் பாதிக்கப்படுவோர் தொகை அதிகரிப்பு - சுகாதார அமைச்சு!
உறவுகளை வலுப்படுத்தும் விதமாக இந்தியா செயற்பட வேண்டும் – வலியுறுத்துகின்றது சீனா!
முச்சக்கரவண்டிகளுக்கு இன்றுமுதல் 10 லீற்றர் எரிபொருள் - ஏனைய மாகாணங்களிலும் கூடிய விரைவில் நடைமுறைப்...
|
|