சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை – இலங்கை போக்குவரத்து சபையின் தீர்மானம்!
Wednesday, August 2nd, 2023
இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் கீழ் சாரதிகளுக்கு தகுதிப் பரிசோதனைக்கு என புத்தகம் ஒன்றினை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் விபத்திற்குள்ளாவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 218 பேருந்துகள் விபத்திற்குள்ளாகியுள்ள அதேநேரம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு வருடாந்தம் சுமார் 30 முதல் 40 மில்லியன் ரூபாய் நட்டஈடாக செலுத்தவேண்டி ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


