சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம்!
Tuesday, May 9th, 2017
நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தார சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப் படிவங்களும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்களும் கடந்த வியாழக்கிழமை பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
யாழ்.மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி!
தேர்தல் வராவிட்டல் தமிழ் அரசியல் கைதிகளை மறந்திருப்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!
இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் - பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்...
|
|
|


