சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் செப்டெம்பர் 20 ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
Tuesday, September 6th, 2022
கடந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில் சில காரணங்களால் 20ஆம் திகதி வரை பிற்போடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
முத்து சிவலிங்கம் இனது பதவி இராஜினாமா!
தேர்தலைப் பிற்போடாதீர்கள் - அரசிடம் கோருகின்றது கபே அமைப்பு!
கருவிழியை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை!
|
|
|


