சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Tuesday, November 28th, 20232022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையினை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கருத்தடை சிகிச்சை விவகாரம் - குற்றப்புலனாய்வு துறையினர் வெளியிட்ட செய்தி!
பஹ்ரைனுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலந்...
டெல்டா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் 4 ஆவது அலை ஆரம்பமாகும் – பிரதி சுகாதார சேவைகள...
|
|