சவாலுக்கு முகம் கொடுத்து சேவை செய்ய எவருமில்லை:அரச முகாமைத்துவ உதவியாளர் சங்க நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கவலை!
Friday, October 28th, 2016
முகாமைத்துவ உதவியாளர் புதிய விடயங்களை அறிவதற்கான துணிவை படிப்படியாக இழந்து விட்டனர். சவால்களுக்கு முகம்கொடுத்து சேவை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன். மத்திய – மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தின் 14ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தெரிவித்ததாவது:
மத்திய, மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் கடந்த 14 ஆண்டுகளாக சிறப்பாக சேவையாற்றுகின்றது. உரிமைகளை வெல்வதற்கு இங்கு மட்டுமல்ல பல நாடுகளில் தொழிற் சங்கங்களின் முக்கியத்துவம் பெரியளவில் உணரப்படுகின்றது. தற்போது அனைவரும் புதிய விடயங்களை அறிவதற்கான துணிவைப் படிப்படியாக இழந்துள்ளோம். சவாலுக்கு முகம் கொடுத்து சேவை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இந்த நிலமை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


