சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வோஷிங்டன் நோக்கி பயணம்!
Sunday, April 17th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று (17) அதிகாலை வோஷிங்டன் நோக்கி பயணிமாகினர்.
குறித்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான Q.R.659 ரக விமானத்தில் இன்று அதிகாலை 5.07 அளவில் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் இந்திய தரப்பினர் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவைளை அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்துக்கு செல்லும் அவர்கள், ஏப்ரல் 19 முதல் 24ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐந்து தவணைகளில் இது இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிலையில் இதன் மூலம் உலக நிதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


