சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
Wednesday, September 29th, 2021
சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக எரிபொருள் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், மசகு எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக, தொடர்ந்து உயர்ந்து வரும் மசகு எண்ணெயின் விலை தற்போது, பீப்பாய் 80 டொலரை கடந்துள்ளது.
தேவைக்கு ஏற்ப மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்படாததே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைகளை இரட்டிப்பாக்க முயற்சிக்கின்றோம் - யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பணி...
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தார்!
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செய...
|
|
|


