சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு சந்தர்ப்பம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, August 12th, 2024

அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்படவுள்ள சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று நுவரெலியாவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனவே அதனை மாற்றி வேறுபாதையில் பயணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

இதேவேளை மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளேன். அத்துடன் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் கிடைக்கும்”  இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

000

Related posts: